வெளியிடப்பட்ட நேரம்: 10:56 (26/09/2017)

கடைசி தொடர்பு:11:13 (26/09/2017)

எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி சுட்டுக் கொலை! மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்?

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லபட்டார். அவரிடமிருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. 

இந்திய பாகிஸ்தான்

கடந்த சில நாள்களாகவே பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் இந்திய எல்லைப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றபோது எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

அவரிடமிருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த ஊடுருவல் காஷ்மீர் மாநிலம் பரமுல்லா மாவட்டத்தில் உரிப் பகுதியில் நடைபெற்றது. இதுகுறித்து பேசிய ராணுவ அதிகாரி ஒருவர், எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார். 

நேற்று ராணுவத் தலைமை ஜெனரல் பிபின் ராவத் பேசுகையில், “தீவிரவாதிகள் தொடர்ந்து இந்தியப் பகுதிக்குள் ஊடுருவி வருகிறார்கள். அவர்களை மண்ணில் புதைக்க நாங்கள் தயாராக உள்ளோம். எதிரிகளுக்கு ஓர் எச்சரிக்கை அளிக்கவே சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடவடிக்கைகள் நடத்தப்படும். தேவைப்பட்டால் மீண்டும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்ற நடவடிக்க மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்தார்.

கடந்த வருடம் செப்டம்பர் 18-ல் உரிப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 23 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மீண்டும் அதுபோன்ற ஒரு தாக்குதலை நடத்தவே தீவிரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவி வருகிறார்கள் என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.