வெளியிடப்பட்ட நேரம்: 11:18 (26/09/2017)

கடைசி தொடர்பு:11:55 (26/09/2017)

தூய்மையே சேவை பிரசார இயக்கம்: களமிறங்கிய சச்சின்!

தூய்மையே சேவை பிரசார இயக்கம் சார்பாக, சச்சின் டெண்டுல்கர் மும்பையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

சச்சின் டெண்டுல்கர்

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, பிரதமரான நரேந்திர மோடி, நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கினார். அந்தத் திட்டம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, தூய்மையே சேவை பிரசார இயக்கம் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து,  தூய்மையே சேவை பிரசார இயக்கத்தில் இணைந்து செயலாற்றுமாறு பல்வேறு துறை பிரபலங்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியிருந்தார். 

இந்த இயக்கத்தின் தூதுவர்களாக இணைந்து செயல்பட கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் பிரபலங்கள் அக்‌ஷய் குமார், அனுஷ்கா ஷர்மா மற்றும் நீடா அம்பானி ஆகியோர் முன் வந்துள்ளனர். தூய்மையே சேவை பிரசார இயக்கத்தில் சேர்ந்து, மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்த பொது இடங்களில், தூய்மைப் பணிகளில் அவர்கள் இறங்க வேண்டும்.

சச்சின் டெண்டுல்கர்

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் மும்பை பாந்த்ரா பகுதியில், இன்று  அதிகாலை தூய்மைப் பணியில் ஈடுபட்டார். தூய்மையே சேவை பிரசார இயக்கத்துக்கு நடிகர் ரஜினிகாந்தும் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.