Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாணவிகள்மீது போலீஸ் தாக்குதல் நடந்ததா? பதறும் பனாரஸ் பல்கலைக்கழகத் துணைவேந்தர்

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் கடந்த 21-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  

BHU

டெல்லியைச் சேர்ந்த அந்த மாணவி தனது பெற்றோரால் ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்தபோது அங்கு பணியில் இருந்த காவலர்களும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவவில்லை எனவும் இந்த சம்பவத்துக்குக் காரணமான நபர்களைக் கைதுசெய்ய வலியுறுத்தி மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தனர். அதேநேரம் அங்கு பிரதமர் மோடியும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் மாணவிகளை வலுக்கட்டாயமாகத் தடியடி நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்

BHU

மாணவிகள் மீது தடியடி நடத்தியது பொதுமக்கள் இடையே கோபத்தை அதிகப்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் பலவும் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளன. பிரதமர் மோடியும், பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத்திடம் பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.  

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் திரிபாதி கூறுகையில், “ பல்கலைக்கழகத்தில் தற்போது இயல்பான சூழ்நிலை நிலவுகிறது. இங்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன. வெளியில் இருந்து வந்தவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்  பிரதமர் மோடியின் வாரணாசி வருகையைக் கருத்தில்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். காவலர்கள் தடியடி நடத்தியது வெளியில் இருந்து வந்தவர்கள் மீதுதான். மாணவிகள் மீது எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை” என்றார். இந்த சம்பவம் தொடர்பாக உ.பி மாநில தலைமைச் செயலாளாரிடம் அறிக்கை ஒன்றை அளித்திருக்கிறார் வாரணாசி காவல்துறை ஆணையாளர். இதில் பல்கலைக்கழக நிர்வாகம் மீதே அவர் குற்றம் சுமத்தி இருக்கிறார். கலவரம் தொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர் திரிபாதியை நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தி உள்ளது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement