Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் மோசடி வழக்கு: முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

சோலார் பேனல் மோசடி வழக்கு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.சிவராஜன் தலைமையிலான கமிஷன், தனது விசாரணை அறிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயனிடம் சமர்ப்பித்தது. 

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் சோலார் பேனல் பதித்துத் தருவதாகக் கூறி மக்களிடம் பல கோடிகள் வசூலித்ததாக பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் சரிதா நாயர் ஆகியோர் மீது புகார் எழுந்தது. இதில், கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்யாடன் ஆகியோருக்கு கோடிகளில் லஞ்சம் கொடுத்ததாக சரிதா நாயர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். கேரள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.சிவராஜன் தலைமையில் விசாரணைக் கமிஷனை அமைத்து கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி அன்றைய முதலமைச்சர் உம்மன் சாண்டி உத்தரவிட்டார். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட சரிதா நாயர், 9 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார். ஆனால், மனைவியைக் கொலை செய்த வழக்கு தொடர்பாக பிஜு ராதாகிருஷ்ணன் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.   

கடந்த சட்டமன்றத் தேர்தலில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியைச் சந்திக்க முக்கிய காரணமாக இந்த ஊழல் வழக்கு கருதப்பட்டது. இதுதவிர, காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் பலருக்கும் இந்த ஊழல் வழக்கில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற மோசடி வழக்கு விசாரணை அறிக்கையை நீதிபதி சிவராஜன், முதலமைச்சர் பினராயி விஜயனிடம் இன்று நேரில் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரது அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்கும் என்று கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement