Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இஷ்ரத் ஜஹான் வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதி ராஜினாமா!

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்த் படேல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

Photo Courtesy: Karnatakajudiciary.kar,nac.in 


நீதிபதி ஜெயந்த் படேல் ராஜினாமா கடிதத்தை கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜிக்கு நேற்று அனுப்பி வைத்ததாக நீதிமன்ற பதிவாளர் தெரிவித்தார். மேலும், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கும் ராஜினாமா கடிதத்தை பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.கே.முகர்ஜி வரும் அக்டோபர் 9-ம் தேதியுடன் ஓய்வுபெற இருக்கிறார். 

இந்நிலையில், அவருக்கு அடுத்தபடியாக மூத்த நீதிபதியாக இருக்கும் தனக்கு தலைமை நீதிபதி பதவி கிடைக்கும் என்று நீதிபதி ஜெயந்த் படேல் நினைத்ததாகவும், ஆனால், அவரை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்ததால் அவர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர் ராஜினாமா செய்ததற்கான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ள ஜெயந்த் படேல், கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் இருந்து கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது நடந்த இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட இவரது தீர்ப்பு நாடு முழுவதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement