Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆகஸ்ட் மாதத்தின் ஜி.எஸ்.டி வருவாய் 90,669 கோடி ரூபாய்!

ஜி.எஸ்.டி மூலம் இந்திய அரசுக்கு ஆகஸ்ட் மாதம் 90,669 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இத்தொகை, கடந்த ஜூலை மாத வருவாயைவிட  குறைவு. 

ஜி.எஸ்.டி வருவாய்

இந்தியாவில், முன்னர் புழக்கத்தில் இருந்த பல்வேறு வரி விதிப்புகளுக்கு மாறாக ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) என்கிற ஒரே விதமான வரி நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. முன்னர் நடைமுறையில் இருந்த சேவை வரி, வாட் வரி, உற்பத்தி வரி எனப் பல வரிகள் நீக்கப்பட்டன. ஜி.எஸ்.டி வரி விதிப்பு, ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி வரியின் மூலம் அரசுக்கு 94,063 கோடி ரூபாய் வரி கிடைத்தது. ஆகஸ்ட் மாதத்தில், ஜி.எஸ்.டி மூலம் 90,669 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், ஜூலை மாத வருவாயைவிட இத்தொகை குறைவாகும். இந்த ஜி.எஸ்.டி வரியில், காம்போசிஷன் வரி திட்டத்தைத் தேர்வுசெய்த 10.24 லட்சம் வரித்தொகை அடங்காது. ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ரிட்டன் தாக்கல்செய்யாதவர்கள் அதிகமானோர் இருக்கின்றனர். அவர்கள் வரி செலுத்த ஆரம்பித்தால், இந்த வருவாய் மேலும் உயரும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement