ஒடிசா மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

ஒடிசா மாநிலத்தில், சரக்கு ரயில் ஒன்று தரம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், அங்கு ரயில் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஒடிசா ரயில் விபத்து

கடந்த சில மாதங்களாகவே, இந்தியாவில் ரயில் விபத்து என்பது தொடர்கதையாகிவருகிறது. சில விபத்துகளில், உயிரிழப்புகள்கூட நடந்தன. இந்நிலையில், இன்று அதிகாலை ஒடிசா மாநிலம் நெர்கண்டி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் வந்தபோது, தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ரயிலின் 16 பெட்டிகள் ரயில் தண்டவாளத்திலிருந்து விலகிக் கவிழ்ந்தன. 

இதனால், அங்கு விரைவு ரயில்கள் உட்பட மற்ற ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது, அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்றுவருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து, அதிகாலை 4 மணியளவில் நடந்தது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!