'கோவிந்தா... கோபாலா...' கோஷத்துடன் விமரிசையாக நடைபெற்ற திருமலை கருடசேவை!

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் கருட சேவை, நேற்று வெகு விமரிசையாக நடந்தது.

கருட சேவை

அரங்கன், கருட வாகனத்தில் அமர்ந்து காட்சி தரும் சேவையை கருடசேவை எனப் பெருமையுடன் போற்றி வணங்குகின்றோம். ஆவணியில் பிறந்த கருட பகவானின் திருக் கைங்கர்யம் ஏற்று வாகனமாக, பேறுபெற்ற மாதம் புரட்டாசி என்று புராணங்கள் கூறுகின்றன. திருப்பதியில் உள்ள ‘சுவாமி புஷ்கரணி’ என்ற குளத்தை வைகுண்டத்திலிருந்து, கருடபகவான் கொண்டு வந்ததாகப் புராணங்கள் வர்ணிக்கின்றன. திருமலையில் திருமாமணி மண்டபத்தில், கருடன் வேங்கடவனைக் கூப்பிய கரத்துடன் நின்று, சிறகுகள் விரித்த நிலையில், நமக்காக பிரார்த்திப்பதால், இங்கு, பகவான் காட்சிதரும் கருடசேவை மிக விசேஷமாகும்.

திருப்பதி திருமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவத்தில், கோயிலின் தங்க துவஜஸ்தம்பத்தின் மேல் கருடக் கொடிக்கு பூஜைசெய்து ஏற்றிய பிறகுதான் நிகழ்ச்சிகளே தொடங்கும். வழக்கம் போல இந்த ஆண்டும் கடந்த 23 -ம் தேதி விழா தொடங்கி நடைபெற்றுவருகின்றது. நேற்று 27- ம் தேதி ( புதன்கிழமை)  திருமலையில் கருட சேவை நடைபெற்றது. இதில் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!