Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சின்ஹா கூறியது தவறென்றால் நிரூபியுங்கள்' - பா.ஜ.க-வை சீண்டும் சிவசேனா

பா.ஜ.க மத்தியில் ஆட்சி செய்தபோது, நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, 'தேசத்தின் பொருளாதாரம், நிதி அமைச்சகத்தின் தவறான யுக்திகளால் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. அருண் ஜெட்லி இதுகுறித்து பேச வேண்டும்' என்று கூறி, கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். சின்ஹாவின் இந்தக் குற்றச்சாட்டை, முடிந்தால் தவறென்று நிரூபியுங்கள் என்று தற்போது மத்திய அரசுக்கு சவால் விட்டிருக்கிறது, சிவ சேனா கட்சி.

யஷ்வந்த் சின்ஹா மற்றும் உத்தவ் தாக்கரே

பா.ஜ.க-வின் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, யஷ்வந்த் சின்ஹா மத்திய நிதி அமைச்சராக இருந்தார். இவர், பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவராவார். நேற்று ஒரு பத்திரிகையில், நாட்டின் பொருளாதாரம்குறித்து கட்டுரை ஒன்று எழுதினார் சின்ஹா. அந்தக் கட்டுரையில், 'நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் தொடர் சொதப்பல் நடவடிக்கைகளால் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து விட்டார். மீண்டும் பொருளாதாரத்தைத் தழைக்கவைக்கும் நடவடிக்கைகளும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை  தென்படவில்லை. அவர், இதுகுறித்து கட்டாயமாக இப்போது பேசியாக வேண்டும். இது, பா.ஜ.க-வில் இருக்கும் பலருக்கே தெரியும். ஆனால், அதைப் பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள்' என்று கூறி, பல உதாரணங்களுடன் ஜெட்லிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கிறார் சின்ஹா. 

இதையடுத்து, சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான 'சாமனா'-வில், 'மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்ற பொருளாதார வல்லுநர்கள், இந்தியப் பொருளாதாரத்தின் நிலையைப் பற்றி எடுத்துக் கூறியபோது, அது கண்டுகொள்ளப்படவில்லை. தற்போது, பா.ஜ.க-வின் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பொருளாதார நிலையைப் பற்றி கருத்து கூறியுள்ளார். அவர், தற்போது தேசவிரோதி என்று முத்திரை குத்தப்படலாம். அவர் சொன்னது தவறென்றால், அதை நிரூபிக்க வேண்டும். பா.ஜ.க-வினருக்கே பொருளாதாரத்தின் தற்போதைய நிலையைப் பற்றி நன்றாகத் தெரியும். ஆனால், அதைப் பற்றி பேசினால் நடவடிக்கை பாயும் என்பதால், வாய் திறக்காமல் இருக்கின்றனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement