'ரோஹிங்கியா மக்கள் அகதிகளே அல்ல' - ஆதித்யநாத் கருத்து

‘இனச் சுத்திகரிப்பு' என்ற பெயரில் மியான்மரின் ரோஹிங்கியா இன மக்கள் அந்த நாட்டு ராணுவத்தால் அழிக்கப்பட்டு வருவதை அடுத்து, அந்த மக்கள் அங்கிருந்து பங்களாதேஷ் மற்றும் இந்திய எல்லைகளுக்கு விரைந்து வருகின்றனர். அகதிகளாக இந்திய எல்லைக்குள் வரும் அவர்களை மத்திய அரசு அனுமதிக்க மறுக்கிறது. இதையொட்டி உத்தரப் பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத், 'ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளே அல்ல' என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆதித்யநாத்

இது குறித்து அவர் மேலும், 'ரோஹிங்கியா மக்களைப் பற்றி தங்களது நிலைப்பாட்டை இந்திய அரசு தெளிவாக அறிவித்துவிட்டது. இந்தியாவுக்கு வரும் ரோஹிங்கியா இன மக்கள் அகதிகளே அல்ல. அவர்கள் அழையாமல் நாட்டுக்குள் நுழைபவர்கள். அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். சிலர் அவர்களுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருவது வருத்தத்திற்குரியது. அவர்களுக்குத் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார். 

முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'இந்தியாவுக்குள் நுழைந்திருக்கும் ரோஹிங்கியா மக்கள் நாற்பதாயிரம் பேரையும் நாடுகடத்தும் திட்டத்தில் இந்தியா உள்ளது' எனத் தெரிவித்திருந்தார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!