பனாரஸ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சர்ச்சைப் பேச்சு!

’பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் பொதுவெளியில் பேசுபவர்கள் தங்கள் நாணத்தை சந்தைப்படுத்துகிறார்கள்’ எனப் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் கூறியிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

துணைவேந்தர்

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் கடந்த 21-ம் தேதி அன்று பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக அப்பல்கலைக்கழக மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். அதேநேரம் அங்கு பிரதமர் மோடியும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் மாணவிகளை வலுக்கட்டாயமாகத் தடியடி நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்திற்கு பல தரப்புகளிலிருந்தும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று பனாரஸ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரிபாதி விடுதி மாணவிகளைச் சந்தித்துப் போராட்டம் குறித்துப் பேசினார். அப்போது அவர், “இதுபோல் போராட்டங்களில் ஈடுபட்டு ஏன் பல்கலைக்கழகத்துக்கு அவப்பெயர் வாங்கித் தருகிறீர்கள். பாலியில் துன்புறுத்தல்கள் குறித்துப் பொது வெளியில் பேசும் பெண்கள் தங்கள் நாணத்தையே சந்தைப்படுத்துகிறார்கள்” எனக் கூறினார். இவரது இந்தப் பேச்சை வீடியோ பதிவாகப் பதிந்த மாணவிகள் தற்போது அதை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!