Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல் பயணமாக எத்தியோப்பியா செல்கிறார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பின்னர், முதல் பயணமாக எத்தியோப்பியா செல்ல உள்ளார், ராம்நாத் கோவிந்த்.

ராம்நாத் கோவிந்த்

சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றவர், ராம்நாத் கோவிந்த். குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பின்னர், முதல் வெளிநாட்டுப் பயணமாக வரும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி, எத்தியோப்பியா நாட்டுக்குச் செல்ல உள்ளார். இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை இன்று அறிவித்தது.

எத்தியோப்பியாவுக்குப் பின்னர், அக்டோபர் 6-ம் தேதி, டிஜிபோட்டி என்ற நகருக்குச் செல்கிறார். ஆப்பிரிக்க நாடுகளிலேயே இந்தியர்கள் வசிக்கும் நாடுகளுள் ஒன்றாக உள்ளது எத்தியோப்பியா. பயணம் செல்லும் குடியரசுத் தலைவர், அந்நாட்டிலுள்ள இந்திய மக்களுடன்  கலந்துரையாட உள்ளார். மேலும், அந்நாட்டில் மூன்று சர்க்கரை ஆலைகள் அமைப்பதற்காக, இந்தியா சார்பில் சுமார் 100 கோடி டாலர்கள் நிதியுதவி இன்று அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறையின் துணைச் செயலாளர் அறிவித்தார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement