Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லியில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தமிழக விவசாயிகள் கைது

Chennai: 

டெல்லியில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள், மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் போலீஸார் அவர்களைக் கைதுசெய்தனர். 

டெல்லி விவசாயிகள் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் இரண்டாவது கட்டமாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்தில், நாள்தோறும் வித்தியாசமான போராட்டங்கள் மூலம் தமிழக விவசாயிகள் தங்களது எதிர்ப்பைக் காட்டிவருகின்றனர். 75 நாள்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் இப்போராட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிவருகிறார்கள். இந்நிலையில், 76-வது நாளான நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள், உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தற்கொலைக்கு முயன்ற விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement