Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிலைகள் கரைப்பு : யமுனையில் மிதக்கும் பூஜைப் பொருள்கள்!

டெல்லியில் துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து, யமுனை நதியில் கரைக்கப்பட்ட துர்கா சிலைகளால் நதிக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

idol immersion

துர்கா பூஜையையொட்டி டெல்லிய துர்கா சிலைகள் வைக்கப்பட்டு, ஐந்து நாள்கள் வழிபாடு செய்யப்பட்டன. பின்னர் விஜயதசமி நாள் முடிந்ததும், நேற்று   துர்கா சிலைகளை யமுனை உள்ளிட்ட இடங்களில் கரைக்கப்பட்டன. குறிப்பாக யமுனையில் அதிகளவிலான சிலைகள் கரைக்கப்பட்டன. துர்கை சிலைகள் உடைந்த மற்றும் பகுதியளவு கரைந்த நிலையில் யமுனை நதியில் தென்படுகின்றன.

yamuna

உடைந்த சிலைகளுடன் சேர்த்து பூஜை பொருள்களும் அங்கு கொட்டப்பட்டுள்ளன. இதனால் நதியின் நீர் தரம் மாசுப்படுவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 


முன்னர் விநாயகர் சதூர்த்தி பண்டிகையின் போது யமுனையில் கரைக்கப்பட்ட சிலைகளால் நதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் டெல்லி அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement