’இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டும்’- ஒய்வு பெற்ற இராணுவ வீரருக்கு சம்மன் | 'prove that you are an Indian citizen', summon to rtd army officer

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (01/10/2017)

கடைசி தொடர்பு:18:50 (01/10/2017)

’இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டும்’- ஒய்வு பெற்ற இராணுவ வீரருக்கு சம்மன்

ஒய்வு பெற்ற இந்திய இரணுவ அதிகாரி ஒருவருக்கு, காவல் துறையிடம் இருந்து, தாங்கள் இந்திய குடிமகன் என்பதை உறுதி செய்ய வேண்டும் என சம்மன் வழங்கப்பட்டுள்ள சம்பவம் அசாம் மாநிலத்தில் நடந்துள்ளது.
 

இந்திய இராணுவ வீரர்

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் முகமது அஸ்மல். இவர் இராணுவத்தில் ஜூனியர் கமிஷன் அதிகாரியாக பணியாற்றியவர். 30 வருடம் இராணுவத்தில் பணியாற்றிய பிறகு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பணியில் இருந்து ஒய்வு பெற்றார். 

இவர் வங்கதேசத்தில் இருந்து 1971 -ல் முறையான ஆவணங்கள் இல்லாமல், இந்தியாவில் குடியேறினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வரும் அக்டோபர் மாதம் 13 -ம் தேதி நீதிமன்றம் முன்பாக ஆஜர் ஆகி, தான் ஒரு இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என அசாம் மாநில காவல்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. 

இது குறித்து பேசிய முகமது அஸ்மல், “நான் 30 வருடம் இந்தியா இராணுவத்தில் பணியாற்றி உள்ளேன். ஏற்கெனவே ஒரு முறை இது போன்று கேள்வி வந்த போது தகுந்த ஆதரங்களை காண்பித்து விட்டேன். தற்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்” என்றார். 
இராணுவத்தில் பணியாற்றிய இவரை  ஜூனியர் கமிஷன் அதிகாரியாக நியமித்தவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகும். வரும் 13 -ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆக போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

ஏற்கெனவே இவரது மனைவிக்கும் இது போன்ற சம்மன் வழங்கபட்டு பின்னர் தீர்பாயத்தால், இந்திய குடிமகன் தான் என தீர்ப்பு வழங்கபட்டது. இந்த விவகாரம், சமூக ஆர்வலர் ஒருவர் வெளிகொண்டு வந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அஸ்மல், 1968 -ல் காம்ரப் மாவட்டத்தில் பிறந்தார். ஆனால் அசாம் காவல் துறை அவரை வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக வந்தவர் என சந்தேகப்படுவதாக தெரிவித்தார். 


[X] Close

[X] Close