'கேரளாவைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்'- ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு கண்டனம் தெரிவித்த பினராயி விஜயன்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் கோகன் பகவத், கேரள அரசு பற்றி கூறிய கருத்துக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் எதிர்வினை ஆற்றியுள்ளார். 

பினராயி விஜயன்

மோகன் பகவத், 'கேரள மற்றும் மேற்கு வங்க மாநில அரசகள் தேசவிரோத சக்திகளையும் வன்முறைகளையும் ஊக்குவிக்கின்றன' என்று தெரிவித்திருந்தார். இதற்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், 'ஆர்.எஸ்.எஸ் தலைவரின் தற்போதைய விமர்சனம் வழக்கம் போல் மக்களை பிளவுபடுத்தும் உத்தியே. கேரள அரசு, தேசவிரோத சக்திகளை ஊக்குவிக்கிறது என்று கூறியுள்ள மோகன் பகவத், அது என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஏன் அவர் இவ்வாறு பேசுகிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் அமைப்பு, கேரள மக்களின் மூளையில் ஊடுறுவமுடியவில்லை என்பதனால் இப்படி பேசியிருக்கிறார். மோகன் பகவத், நீங்கள் கேரளாவைப் பற்றி கவலைப்பட வேண்டாம். கேரளாவில் மதச்சார்பற்ற ஜனநாயக அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. உங்களிடமிருந்தோ அல்லது ஆர்.எஸ்.எஸ் இடமிருந்தோ எங்களுக்கு எந்தப் பாடமும் வேண்டாம்' என்று பதிலடி கொடுத்துள்ளார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!