Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உயர்ந்தது சிலிண்டர் விலை!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.1.50 காசுகள் உயர்த்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சமையல் எரிவாயு சிலிண்டருன் விமானத்துக்கான எரிபொருள் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய அறிவிப்பின்படி மானிய விலையில் வழங்கப்படும் ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 479 ரூபாய் 11 காசுகளாக இருக்கும். மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 656 ரூபாய் 50 காசுகளாக இருக்கும். 

இனி ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4 ரூபாய் வீதம் உயர்த்தப்படும் என கடந்த ஜூலை மாதம் பெட்ரோலியத்துறை அறிவித்திருந்தது. அதன் அடிப்படையிலேயே தற்போது சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோலவே இனி ஒவ்வொரு மாதமும் விலை ஏற்றம் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல், உயர்த்தப்பட்ட விமான எரிபொருள் விலை 6 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement