Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’ஆயிரம் மகாத்மா காந்தி, மோடி வந்தாலும் தூய்மையான இந்தியா சாத்தியம் ஆகாது’ - மோடி பேச்சு

ந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு 2014-ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தை காந்தி ஜெயந்தி அன்று தொடங்கி வைத்தார். இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிகழ்ச்சியில் மோடி கலந்துகொண்டார். 

Modi

முன்னதாக டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் அவருக்கு மரியாதை செலுத்திய மோடி, அதன் பின்னர் தூய்மை இந்தியா திட்டத்தின் மூன்றாவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “மகாத்மா காந்தியின் வழி என்றுமே தவறாகாது. இந்தியா ஒரு நாடாக பல சவால்களை சந்தித்து வருகிறது. நாம் அதை எதிர்கொண்டு, வெற்றி பெறுவோம். சவால்களைக் கண்டு ஓட மாட்டோம். 

ஆயிரம் மகாத்மா காந்தி, ஒரு லட்சம் மோடி அல்லது அனைத்து மாநில முதல்வர்கள் என யாராலும் தூய்மையான இந்தியா சாத்தியம் ஆகாது. இது 125 கோடி இந்திய மக்களால் மட்டுமே சாத்தியம் ஆகும்.   

குஜராத்தில் நான் முதல்வராக இருந்தபோது, சிறு கிராமங்களைத் தத்தெடுத்து அவர்களுக்கு வீடுகள் கட்டுவோம். அப்போது அங்கு இருந்தவர்கள், கழிவறைகளுக்குப் பதிலாகப் பெரிய அறைகள் வேண்டும் எனக் கூறினர். நான் அதை மறுத்துவிட்டேன். கழிவறை கட்டாயம் வேண்டும் என கூறி அதைக் கட்டினோம். சில காலம் கழித்து அங்கு சென்றபோது, கழிவறையில் ஆடுகள் கட்டி வைத்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதற்காக மக்களை நான் குற்றம் சொல்லவில்லை. நமது மனநிலை அவ்வாறு உள்ளது. அதை மாற்ற வேண்டும். 

ஒவ்வொரு மனிதனும் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்குகொள்ள வேண்டும். குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள், பெண்கள் மற்றவர்களைக் கழிவறைகளைப் பயன்படுத்துமாறு நிர்ப்பந்திக்க வேண்டும். அதன் மூலம் நம் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளலாம்” எனப் பேசினார். முன்னதாக பிரதமர் மோடி தூய்மை விருதுகளையும் வழங்கினார்.
 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement