2018 மார்ச் வரை ஆன்லைன் சேவைக் கட்டணம் கிடையாது! - ரயில்வேத் துறை அறிவிப்பு

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு 2018-ம் ஆண்டு மார்ச் வரை சேவைக் கட்டணம் இல்லை என்று ரயில்வேத் துறை அறிவித்துள்ளது. 


ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ரூ.20 முதல் ரூ.40 வரை சேவைக் கட்டணமாக ரயில்வே வசூலித்து வந்தது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கான சேவைக் கட்டணத்தை ரயில்வேத் துறை கடந்த நவம்பரில் ரத்து செய்திருந்தது. ஜூன் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்ட இந்தத் திட்டம் மீண்டும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், சேவைக் கட்டணம் ரத்து 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொடரும் என்று ரயில்வேத் துறை தற்போது அறிவித்துள்ளது.

இதுதொடர்பான சுற்றறிக்கை கடந்த செப்டம்பர் 29-ம் தேதியே ஐஆர்சிடிசி-க்கு ரயில்வே வாரியம் அனுப்பியுள்ளது, தற்போது தெரியவந்துள்ளது. ரயில்வேத் துறையின் மொத்த வருமானத்தில் 33 சதவிகிதம் சேவைக் கட்டணம் மூலமாகவே கிடைப்பதாக ரயில்வேத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த நிதியாண்டு கணக்கின்படி ரயில்வேத் துறையின் மொத்த வருமானமான ரூ.1,500 கோடியில், ரூ.540 கோடி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கான சேவைக்கட்டணத்திலிருந்து பெறப்பட்டது என்றும் அவர் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!