Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’27 கோடி போலி ரேஷன் அட்டைகள் நீக்கம்’: மத்திய அமைச்சர் தகவல்!

'27 கோடி போலி ரேஷன் அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன’ என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

ரவி

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் பணியைத் தொடர்ந்து வங்கி எண், பான் எண் எனப் பல அரசு அடையாள அட்டைகளிலும் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்துவந்தது. இம்மாதிரியாக ஆதார் எண் இணைப்புத் திட்டம் மூலமாக பல போலி அடையாள அட்டைகளைக் கண்டறிய முடிந்தது என மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் கூறுகையில்,”ஆதார் எண்ணை வங்கிக் கணக்குகளுடன் இணைப்பதன்மூலம் போலி வங்கிப் பணப் பரிவர்த்தனைகளைக் கண்டறிந்து தடுக்க முடியும். மேலும், போலி வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களையும் அடையாளம் காண முடியும். இதுவரை, தேசிய அளவில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஆதார் விவரங்களை அவரவர் வங்கிக் கணக்குகளுடன் இணைத்துள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம், சுமார் 3 கோடி போலி சிலிண்டர் இணைப்புகளும், 27 கோடி போலி ரேஷன் அட்டைகளும் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதனால், அரசுக்கு சுமார் 58 ஆயிரம் கோடி ரூபாய் மீதியாகியுள்ளது’ எனக் கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement