Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்குப் புதிய தற்காலிகத் துணைவேந்தர்!

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், கடந்த சில நாள்களாகப் பல சர்ச்சைகளில் சிக்கிவந்த நிலையில், தற்போது பல்கலைக்கழகத்துக்குப் புதிய தற்காலிகத் துணைவேந்தராக நீரஜ் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.

banaras university

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், கடந்த 21-ம் தேதி அன்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக, பல்கலைக்கழக மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். அதேநேரம், அங்கு பிரதமர் மோடியும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், மாணவிகளின் மீது வலுக்கட்டாயமாகத் தடியடி நடத்தி, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்துக்குப் பல தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டன.

இதையடுத்து, நேற்று பனாரஸ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரிபாதி, விடுதி மாணவிகளைச் சந்தித்துப் போராட்டம் குறித்துப் பேசினார். அப்போது அவர், “இதுபோல போராட்டங்களில் ஈடுபட்டு ஏன் பல்கலைக்கழகத்துக்கு அவப்பெயர் வாங்கித்தருகிறீர்கள். பாலியல் துன்புறுத்தல்கள்குறித்து பொது வெளியில் பேசும் பெண்கள், தங்கள் நாணத்தையே சந்தைப்படுத்துகிறார்கள்” எனக் கூறினார்.

இந்த சர்ச்சைப் பேச்சுத் துணைவேந்தரின் பதவிக்காலம் வருகிற நவம்பர் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஓய்வு பெற உள்ள திரிபாதி, சொந்தக் காரணங்களுக்காகத் தற்போது விடுப்பில் சென்றுள்ளார். அவருக்குப் பதிலாக, புதிதாக தற்காலிகத் துணைவேந்தராக நீரஜ் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக முன்பு இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement