வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (04/10/2017)

கடைசி தொடர்பு:20:15 (04/10/2017)

எஸ்.பி.ஐ-யின் புதிய தலைவராக ரஜ்னீஷ் குமார் நியமனம்!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் புதிய தலைவராக ரஜ்னீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

எஸ்.பி.ஐ வங்கியின் தற்போதைய தலைவரான அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக்காலம் இந்த வாரத்துடன் முடிகிறது. இதையடுத்து புதிய தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ரஜ்னீஷ் குமார் அடுத்தவாரம் பதவியேற்க இருக்கிறார். கடந்த 1980-ல் பாரத ஸ்டேட் வங்கியில் கடைநிலை ஊழியராகப் பணியில் சேர்ந்த ரஜ்னீஷ், வங்கியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். எஸ்.பி.ஐ-யின் முதல் பெண் தலைவராகக் கடந்த 2013-ல் நியமிக்கப்பட்ட அருந்ததி பட்டாச்சார்யாவின் 3 ஆண்டுகள் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகள் இணைப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. 

அருந்ததிக்குப் பின்னர், புதிய தலைவர் பொறுப்புக்காக எஸ்.பி.ஐ-யின் நிர்வாக இயக்குநர்கள் 4 பேரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது. முடிவில் புதிய தலைவராக ரஜ்னீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 3 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று தெரிகிறது. வங்கியின் நிர்வாக இயக்குநராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாக ரஜ்னீஷ் குமார், எஸ்.பி.ஐ-யின் முதலீட்டுப் பிரிவின் தலைவராகப் பதவி வகித்துவந்தார்.