இரு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட பெண் சாமியாருக்கு ராஜ மரியாதை கொடுத்த டெல்லி போலீஸ்!

இரண்டு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் சாமியார் ராதே மா-வுக்கு, டெல்லி காவல் நிலையத்தில் வி.ஐ.பி உபசரிப்பு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல் நிலையத்தில் ராதே மா அமர்ந்திருக்கும் புகைப்படம், இணையத்தில் வைரல்.

ராதே மா
 

பஞ்சாப் மாநிலத்தில், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் ராதே மா என்னும் சுக்விந்தர் கவுர்.  4-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ராதே மா, 23 வயதில் மஹந்த் ராம் தீன் தாஸின் சீடரானார். சுக்விந்தர் கவுர், ராதே மா-வாக மாறியதற்கு முக்கியக் காரணமானவர், மஹந்த் ராம் தீன் தாஸ். பின்னர் மும்பை வந்த ராதே மா, ஆசிரமம் தொடங்கி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிப் பிரபலமானார். நிக்கி குப்தா என்னும் பெண்ணிடம் வரதட்சணை வாங்குமாறு, அந்தப் பெண்ணின் மாமியரைத் தூண்டிவிட்டதாக, ராதே மா மீது குற்றம் சாட்டப்பட்டது. நிக்கி குப்தா, ராதே மா மீது போலீஸில் புகார் அளித்தார். மேலும், சில சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளும் ராதே மா மீது உள்ளன.

இந்நிலையில், டெல்லி காவல் அதிகாரிகள், ராதே மா-வுக்கு வி.ஐ.பி உபசரிப்பு அளித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளனர். இன்று காலை, விவேக் விஹார் காவல் நிலையம் சென்றுள்ளார் ராதே மா. காவல் நிலையத்தில் இருந்த ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி, தன் இருக்கையை ராதே மா-வுக்கு அளித்துவிட்டு எழுந்து, பவ்யமாக நின்றுகொண்டிருக்கிறார். இந்தப் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி, டெல்லி போலீஸுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!