Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் - முக்கிய அறிவிப்புகள்!

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சிலின் 22-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  ஜி.எஸ்.டி வரி விதிப்பில் சில சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கினார். 

* வணிக சின்னமற்ற ஸ்நாக்ஸ் வகைகளுக்கான ஜி.எஸ்.டி. வரி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

* வணிக சின்னமற்ற ஆயுர்வேத மருந்துகளுக்கான வரி விகிதம் 12-ல் இருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது. 

* ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்குக் மேல் வணிகம் செய்யும் ஏ.சி. உணவகங்களுக்கான வரியை 18 சதவிகிதத்திலிருந்து குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

*கைத்தறி நூலுக்கான வரி 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

*டீசல் எஞ்சின் உதிரி பாகங்கள் மற்றும் டீசல் பம்ப்-புகளுக்கான வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. 

* 22-வது  ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 26 வகையான பொருள்களுக்கான வரி விகிதம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. 

* ஏற்றுமதியாளர்களுக்கான இ-வாலெட் வசதி 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படும். 

* இணக்க முறையில் வரி செலுத்தும் சிறு வணிகர்களுக்கான உச்ச வரம்பு ரூ.75 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்படுகிறது.

* ஆண்டுக்கு ரூ.1.5 கோடி கீழ் வணிகம் செய்யும் வணிகர்கள் மாதந்தோறும் ஜி.எஸ்.டி. ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வதற்குப் பதிலாக 3 மாதங்களுக்கு ஒருமுறை தாக்கல் செய்யும் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. 

* ரூ.50,000-த்துக்கும் அதிகமான விலையில் நகைகள் வாங்கும்போது பான் கார்டு தேவை என்ற நடைமுறையை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மறு உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement