Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துப்பாக்கிமுனையில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில், பெண் ஒருவர் நான்கு பேரால் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில், 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் பக்கத்துக் கிராமத்துக்குச் சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, காரில் வந்த நான்கு பேர், அந்தப் பெண்ணின் கணவனைத் தாக்கிவிட்டு, பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ``நான்கு பேர் என்னைக் கரும்புக் காட்டுக்கு இழுத்துச்சென்றதோடு, என் கணவனை அடித்துக் கட்டிவைத்தனர். என் 3 வயதுக் குழந்தையைக் கொன்றுவிடுவதாக மிரட்டி, துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுபற்றி வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினர்'' என்று கூறினார்.

இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், “இது தொடர்பாக வழக்கு, பதிவுசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவச் சோதனை செய்யப்பட உள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது” என்றார். இந்தச் சம்பவம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement