Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதானியை துரத்த போர்க்கொடி தூக்கியுள்ள ஆஸ்திரேலிய மக்கள்! #AdaniGoHome

ஆஸ்திரேலியாவில் இந்திய நிறுவனமான அதானிக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

அதானி
 

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் (Carmichael coal mine) அமைக்க அதானி நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியா அரசு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் வழங்கியது. அதானியின் நிலக்கரிச் சுரங்கக் கட்டுமானத்துக்கு வடஆஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நிலக்கரி சுரங்கத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்று அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

அதானி
 

இந்நிலையில், அதானி  நிறுவனத்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள போண்டி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலக்கரி வெட்டி எடுக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோஷங்கள் எழுப்பினர். ’Stop Adani', 'Adani go home' என்னும் பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement