இந்திய விமானப்படைக்கு வாழ்த்துகள்! #IAFat85  #AFDay17

இந்திய விமானப்படையின் 85-வது ஆண்டுவிழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய விமானப்படைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  ட்விட்டரில்  #IAFat85 , #IndianAirforceday, #AirForceDay உள்ளிட்ட ஹேஷ் டாக்கின் கீழ் மக்கள் இந்திய விமானப்படைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

indian air force day
 

’இந்திய விமானப்படையின் 85-வது ஆண்டுவிழாவில், விமானப் படை வீரர்களின் துணிச்சல், தியாகத்தை வணங்குகிறேன்’ என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

’இந்த விமானப்படை தினத்தில், நமது தைரியமான விமானப்படை வீரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் தைரியம் மற்றும் வலிமை நம் வானம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துகின்றன’ என்று மோடி பதிவிட்டுள்ளார்.

modi
 

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் இந்திய விமானப் படை விழா வெகு விமர்சையாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. அங்கு நடைபெற்ற விழாவில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், விமானங்கள் மற்றும் பாராசூட் மூலம் இந்திய விமானப்படை வீரர்கள் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!