’போரைச் சந்திக்கத் தயார்’: இந்தியத் தளபதி! | 'Ready to face war': Indian air force chief

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (08/10/2017)

கடைசி தொடர்பு:08:42 (09/10/2017)

’போரைச் சந்திக்கத் தயார்’: இந்தியத் தளபதி!

’எப்போது போர் வந்தாலும் சந்திக்கத் தயார்’ என இந்திய விமானப்படையின் 85-வது ஆண்டுவிழாவில் விமானப்படைத் தளபதி பி.எஸ்.தானோவ் தெரிவித்துள்ளார்.

விமானப்படை

இந்திய விமானப்படையின் 85-வது ஆண்டுவிழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய விமானப்படைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் இந்திய விமானப் படை விழா வெகு விமர்சையாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. அங்கு நடைபெற்ற விழாவில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், விமானங்கள் மற்றும் பாராசூட் மூலம் இந்திய விமானப்படை வீரர்கள் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். 

இந்நிகழ்வின் நிறைவுப்பகுதியில் பேசிய விமானப்படைத் தளபதி தானோவ் கூறுகையில், “இந்திய விமானப்படை மிகுந்த வலிமையுடனே உள்ளது. எப்போது, எந்நேரத்தில் போர் வந்தாலும் இந்திய விமானப்படை சந்திக்கத் தயாராகவே உள்ளது. மேலும் விமானப்படையின் தளவாடங்களையும் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே வருகிறோம்” என்றார்.