வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (08/10/2017)

கடைசி தொடர்பு:08:41 (09/10/2017)

சீன எல்லை வீரர்களுக்கு ‘நமஸ்தே’ கற்றுக்கொடுத்த நிர்மலா சீதாராமன்!

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் இந்திய- சீன எல்லையில் உள்ள சீன எல்லை ராணுவ வீரர்களுக்கு ‘நமஸ்தே’ செய்யக் கற்றுக்கொடுத்துள்ளார்.

நிர்மலா சீதாராமன்

இந்திய - சீன எல்லையான சிக்கிம் பகுதிக்கு இன்று வருகை தந்த இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எல்லையில் உள்ள சீன ராணுவ வீரர்கள் மற்றும் சீன அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். சீன எல்லை வீரர்களுக்கு நிர்மலா சீதாராமன் ‘நமஸ்தே’ செய்வதற்கு கற்றுக்கொடுத்து அதற்கு அர்த்தமும் விளக்கிய வீடியோ காட்சி ஒன்றை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவில், சீன எல்லை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோருடன் பரஸ்பரம் அறிமுகத்துக்குப் பின்னர் ‘நமஸ்தே’ என வணக்கம் வைத்தார் அமைச்சர். பின்னர் இதற்கான அர்த்தம் தெரியுமா என சீன வீரர்களிடம் கேட்க, அதில் ஒருவர் ‘தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி’ என ஆங்கிலத்தில் கூறினார். பதிலுக்கு அமைச்சர், ’சீன மொழியில் எப்படி வணக்கம் சொல்வீர்கள்? எனக் கேட்க சீன வீரர்களும் அமைச்சருக்கு கற்றுக்கொடுத்தார்கள்.

இந்திய- சீன எல்லையில் சீன ராணுவம் மீண்டும் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இந்தச் சூழலில் தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.