கோட்சே தான் காந்தியைக் கொன்றார்! - பா.ஜ.கவுக்கு எதிராக சீறும் இந்து மகா சபை | Hindu Mahasabha lashes out BJP and RSS

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (08/10/2017)

கடைசி தொடர்பு:08:38 (09/10/2017)

கோட்சே தான் காந்தியைக் கொன்றார்! - பா.ஜ.கவுக்கு எதிராக சீறும் இந்து மகா சபை

மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் தோண்டியெடுத்து விசாரிப்பதும்,  தேவையில்லாமல் நான்காவது குண்டு எங்கிருந்து வந்தது என்பதை ஆராய்வதும் மகாசபை மரபை அழிக்கும் செயல் என்று இந்து மகாசபை தெரிவித்துள்ளது. 

godse
 

காந்தி 1948-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் துாக்கிலிடப்பட்டனர். ஆண்டுகள் கடந்த பின்னர், தற்போது காந்தி கொலை தொடர்பாக மும்பையைச் சேர்ந்த டாக்டர் பங்கஜ் குமுத்சந்த் பத்னிஸ் என்பவர் புதிய சந்தேகங்களை எழுப்பி வருகிறார். அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், காந்தி சுடப்பட்டபோது அவரை நோக்கி நான்கு  துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன. ஆனால், கோட்சே சுட்டது மூன்று குண்டுகள்தான். அந்த நான்காவது குண்டுதான் காந்தி உயிரிழக்கக் காரணம். ஆனால் அந்த நான்காவது குண்டு எங்கிருந்து வந்தது என்பதுகுறித்து முறையாக விசாரிக்கப்படவில்லை. இதில் வெளிநாட்டுச் சதியும் அடங்கியுள்ளது. இதுகுறித்து மறு விசாரணை வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை கடந்த 6-ம், தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் , ‘எதற்காக இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினர். இதனிடையே, மனுதாரர் தரப்பில் கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்க அவகாசம் கேட்கப்பட்டது.  அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இந்த விஷயத்தில் நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வக்கீலும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான அமரிந்தர் சரணை நியமித்து உத்தரவிட்டனர். 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்து மகா சபையின் தேசிய துணைத் தலைவர் அஷோக் ஷர்மா ‘காந்தியை சுட்டுக் கொன்றது இந்து மகா சபையைச் சேர்ந்த கோட்சேதான். அது எங்கள் பெருமை. நான்காவது குண்டு குறித்து தேவையில்லாமல் சர்ச்சை எழுப்பி வருகின்றனர். பா.ஜ.க வும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்து மகாசபையின் மரபை அழிக்கக் கூடாது. கோட்சேவின் அடையாளத்தை இந்து மகா சபையில் இருந்து பிரிக்க முடியாது’ என்று பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார். 

நன்றி : The Times Of India

நீங்க எப்படி பீல் பண்றீங்க