பணம் மதிப்பு நீக்கத்தால் அமித்ஷா குடும்பம் மட்டும்தான் பயனடைந்தது..! ராகுல் காந்தி தாக்கு

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் அமித் ஷா குடும்பம் மட்டுமே பயனைடைந்துள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்துவருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பண மதிப்பு நீக்க நடவடிக்கை இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஊழல் என்று கடுமையாக விமர்சித்தார். இந்தநிலையில், இதுதொடர்பான கருத்து ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'இறுதியாக, பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் யார் பயனடைந்துள்ளார்கள் என்று நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். ரிசர்வ் வங்கியோ, ஏழைகளோ, விவசாயிகளோ பயனடையவில்லை. அமித்ஷா குடும்பம்தான் பயனைடைந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். அதன்கீழே அமித் ஷா மகனுக்குச் சொந்தமான தொழில் நிறுவனம் ஈட்டியுள்ள லாபம் தொடர்பாக ஆங்கில நாளிழிதலில் வந்த கட்டுரையையும் இணைத்துள்ளார். அந்தக் கட்டுரையில், மோடி பிரதமராக பதவியேற்றதற்குப் பிறகு அமித்ஷா மகனுக்குச் சொந்தமான நிறுவனம் 16,000 மடங்கு அதிகமான லாபத்தைச் சம்பாதித்துள்ளது என்று தரவுகளுடன் விளக்கியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!