வெளியிடப்பட்ட நேரம்: 09:28 (10/10/2017)

கடைசி தொடர்பு:13:22 (11/10/2017)

100 மீட்டர் உயரத்தில் பிரமாண்ட ராமர் சிலை! - ஆதித்யநாத் அரசின் அடுத்த திட்டம்

அயோத்தியில், ராமருக்கு 100 மீட்டர் உயரத்தில் சிலை வைக்க யோகி ஆதித்யநாத் அரசு திட்டமிட்டுவருகிறது.

ராமர் சிலை


உத்தரப்பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு புதிய திட்டங்களை அறிவித்துவருகிறது. அந்த வரிசையில் உ.பி-யின் சுற்றுலா அமைச்சகம், ராமருக்கு மிகப் பெரிய சிலை வைக்கும் திட்ட வரைவை முன் மொழிந்துள்ளது. ராமர் பிறந்த இடம் என்று கூறப்படும் அயோத்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் பைசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதை, ராமஜென்மபூமி என்றும் அழைப்பார்கள். இந்நகரத்தை ஒட்டியுள்ள சரயு ஆற்றங்கரையில்தான் ராமருக்கு 100 மீட்டர் உயரத்தில் பிரமாண்ட சிலை வைக்க திட்டமிட்டுள்ளது ஆதித்யநாத் அரசு. சிலை அமைப்பதுகுறித்த முன்வரைவு, உ.பி ஆளுநர் ராம் நாயக்கிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க