Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டுவர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' - நீதிபதி உத்தரவு!

ஸ்ரீதர்

''கம்போடியா நாட்டில் தற்கொலைசெய்துகொண்ட ரவுடி  ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டுவர, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கொலை, ஆள் கடத்தல் எனப் பல்வேறு வழக்குகளில் காவல் துறையால் தேடப்பட்டுவந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர், கடந்த 4–ம் தேதி கம்போடியா நாட்டில் தற்கொலைசெய்துகொண்டார். அவரது உடல், அங்குள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீதரின் மகள் தனலட்சுமி, 'தனது தந்தையின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்ரீதரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கும்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும்  காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டது. 

இதையடுத்து, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், '‘ஸ்ரீதரின் பாஸ்போர்ட் 2015–ம் ஆண்டு சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகளால் முடக்கப்பட்டது. அவர், இலங்கை நாட்டின் குடிமகன் என்று கூறி, அங்குள்ள பாஸ்போர்ட் மூலமாகக் கம்போடியா சென்றுள்ளார். எனவே, ஸ்ரீதரின் உடலை இலங்கைக்குக் கொண்டுசெல்வதற்குத்தான் கம்போடியா அரசு அனுமதி வழங்கும். அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் பல்வேறு சட்டச் சிக்கல்கள் உள்ளன. இருந்தாலும் இந்தியாவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது'’ என்றார். அப்போது நீதிபதி, ‘'ஸ்ரீதருக்கு ஏற்கெனவே இந்திய அரசும் பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் ஸ்ரீதரின் உடலை இந்தியா கொண்டுவர முடியாதா'’ என்று கேள்வி எழுப்பினார். பின்னர், இதுதொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளிடம் உடனடியாகக் கேட்டு தெரிவிக்கும்படி கூறி விசாரணையைப் பிற்பகலுக்குத் தள்ளிவைத்தார். 

 பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு வக்கீல், ஸ்ரீதரின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப கம்போடியா அரசு ஒப்புக்கொண்டு உள்ளதாகத் தெரிவித்தார். இதைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதி, ''ஸ்ரீதரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர தடையில்லாச் சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு 24 மணி நேரத்துக்குள் வழங்க வேண்டும். அதனடிப்படையில் உடலை காஞ்சிபுரத்துக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் உத்தரவிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement