Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் எப்போது? தலைமைத் தேர்தல் ஆணையர் பதில்

குஜராத் மாநிலத்தில், சட்டசபைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி ஏ.கே ஜோதி, இரண்டு நாள் குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார். மத்தியில் ஆளும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகளின் பார்வை முழுவதும் அடுத்து நடக்க இருக்கும் சட்டசபைத் தேர்தல்மீது விழுந்துள்ளது. 

குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலை அதிக முக்கியதுவத்துடன் இரு கட்சிகளும் கையாளுகின்றன. மோடி பிரதமர் ஆன பிறகு, அவரது சொந்த மாநிலத்தில் நடக்கும் தேர்தல் என்பதால், பா.ஜ.க தீவிர யுக்திகளை வகுத்துவருகிறது. அதே நேரத்தில், மோடி பிரதமராகி விட்டதால் மாநில தேர்தல் களத்தில் இல்லாததைப் பயன்படுத்தி, வெற்றிபெற முயற்சிக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் துணைத் தலைவர் தற்போது குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுவருகிறார். 

தற்போதைய பா.ஜ.க-வின் ஆட்சிக் காலம் அடுத்த வருடம் ஜனவரி 22-ல் நிறைவடைகிறது. குஜராத்தில் இரண்டு நாள் ஆய்வு நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஜோதி, “குஜராத்தில் தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் திருப்திகரமாக உள்ளது. டிசம்பரில் சட்டசபைத் தேர்தல் நடைபெற வாய்புள்ளது. ஒரே கட்டமாக நடத்தலாமா அல்லது இரண்டு கட்டமாக நடத்தலாமா என்பதுகுறித்து விவாதிக்கப்படும்“ என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement