ஜம்மு- காஷ்மீர் : ராணுவ வீரர்கள் இருவர் வீர மரணம்! | Two Army men have lost their lives during encounter

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (11/10/2017)

கடைசி தொடர்பு:11:15 (11/10/2017)

ஜம்மு- காஷ்மீர் : ராணுவ வீரர்கள் இருவர் வீர மரணம்!

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பந்திபுரா பகுதியில் உள்ள ஹஜின் எல்லைப் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதில், ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க