நோயாளிகளுக்கான ஸ்ட்ரெக்சரில் குப்பைகள் அகற்றம்..! திருப்பதி அரசு மருத்துவமனையின் அவலம்

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் குப்பைகளை அள்ளிச் செல்ல நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஸ்ட்ரெக்சர்கள், வீல் சேர்கள் பயன்படுத்தப்படுகின்றன. குப்பையில் உள்ள தொற்று நோய்க்கிருமிகள் படிந்த அந்தச் சேர்களைத்தான் நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கிறது. இதை நோயாளிகள் பயன்படுத்தினால் என்ன நேரிடும் என்று அங்கு குப்பைகளை அகற்றும் பணியாளர்களே கேட்கின்றனர்.

அரசு மருத்துவமனைகளை, அபிவிருத்தி செய்ய கோடிக்கணக்கில் மாநில அரசு செலவு செய்வதாகக் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த ரூயா மருத்துவமனையில் மட்டும் துப்புரவுப்பணியாளர்கள் 195 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் கையில் கிளவுஸ் அல்லது காலில் அணிவதற்கு பூட்ஸ்கூட அளிப்பதில்லை. ஸ்வைன் ஃபுளூ, டி.பி நோய்களுக்கான மருத்துவப் பிரிவுகளின் மிக அருகில் குப்பைகள் கொட்டிக்கிடக்கின்றன. நோயாளிகளின் உயிருடன் விளையாடும் நிலை காணப்படுகிறது என்று அங்கு துப்புரவில் ஈடுபடும் பணியாளர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து சுகாதார நலத்துறை அமைச்சர் காமினேனி ஸ்ரீநிவாஸ் கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொண்டால் நலமாக இருக்கும் என்றனர் அங்குள்ள சமூக ஆர்வலர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!