ஹேம மாலினி புத்தகத்துக்கு மோடி முன்னுரை!

மோடி

டிகை ஹேம மாலினி வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்துக்குப் பிரதமர் மோடி முன்னுரை எழுதியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தி திரையுலகின் 'ட்ரீம் கேர்ளா'க இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்தவர் நடிகை ஹேம மாலினி. இவர், 1968-ம் ஆண்டு, 'சப்னோ கா செளடகர்' என்ற படத்தில் ராஜ் கபூருக்கு ஜோடியாக அறிமுகமாகி, தொடர்ந்து அழகாலும், தன்னுடைய நடிப்பாலும் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தார். பிறகு திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு அரசியலில் கால்பதிக்கத் தொடங்கிய அவர், தற்போது பி.ஜே.பி சார்பில் உத்தரப்பிரதேசத்தின் மதுரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இந்த நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை அவரது அனுமதியுடன் புத்தமாக எழுதியுள்ளார் 'ஸ்டார் டஸ்ட்' இதழின் ஆசிரியரும் தயாரிப்பாளருமான ராம் கமல் முகர்ஜி. 'பியாண்ட் தி ட்ரீம் கேர்ள்' என்ற அந்தப் புத்தகம், ஹேம மாலினியின் பிறந்தாளான வருகிற 16-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த நூலுக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியிருக்கும் தகவல், தற்போது கசியத் தொடங்கியிருக்கிறது.

இதுகுறித்து அந்தப் புத்தகத்தின் நூலாசிரியரான ராம் கமல் முகர்ஜி, ''ஹேம மாலினி குறித்த தனது எண்ணங்களை நமது பிரதமர் இந்தப் புத்தக முன்னுரையில் எழுதியுள்ளார். இது, சுருக்கமான, இனிமையான மற்றும் தெளிவான ஒன்றாக வந்துள்ளது. ஓர் ஆசிரியராக எனக்கும், நடிகையாக ஹேம மாலினிக்கும் இது மிகப்பெரிய கெளரவமாகும். ஏனென்றால், பதவியில் இருக்கும் ஒரு பிரதமர், இந்தி திரைப்பட உலகைச் சேர்ந்த கலைஞர் ஒருவரைப் பற்றிய புத்தகத்துக்கு முன்னுரை எழுதுவது இதுவே முதன்முறையாகும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!