பீகாரை முன்னேற்றப் பாதைக்கு நிதிஷ்குமார் கொண்டு செல்வார்: பிரதமர் மோடி

பீகார் மாநிலத்தில் இருக்கும் பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பாட்னா வந்தார். அவரை அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் வரவேற்றார்.

நித்திஷ் குமார் மற்றும் மோடி

பின்னர் நிகழ்ச்சியின்போது நிதிஷ்குமார், 'பாட்னா பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.

இதையடுத்து, பேசிய மோடி, 'நிதிஷ்குமார், பீகார் மாநிலத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வதில் முழு கவனத்துடன் இருக்கிறார். மத்திய அரசு இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வதில் குறியாக இருக்கிறோம். இருவரும் தொடர்ந்து பீகாருக்காக உழைத்து, 2022-ம் ஆண்டுக்குள் வளர்ந்த மாநிலங்களுக்கு இணையாக முன்னேற்றுவோம். பீகாருக்கு கல்விக் கடவுளான சரஸ்வதியின் அருள் இருக்கிறது. இனி செல்வத்தின் கடவுளான லக்‌ஷ்மியின் அருளும் இருக்கும். இதனால், விரைவில் பீகார், பொருளாதார ரீதியில் பல உச்சங்களைத் தொடப் போகிறது' என்று தெரிவித்தார். இதையடுத்து, மாநிலத்துக்கான பல திட்டங்களை இன்று தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!