பிரணாப் முகர்ஜி பற்றி மன்மோகன் சிங் கருத்து!

நான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது பிரணாப் முகர்ஜி வருத்தம் அடைந்ததற்கான காரணங்கள் இருக்கின்றன என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 


முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுதிய 'கூட்டணி ஆண்டுகள் : 1996- 2012 '(The Coalition Years: 1996-2012) புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 'பிரணாப் முகர்ஜி அரசியல்வாதியாக ஆனது இயற்கையானது. ஆனால், நான் அரசியல்வாதியாக ஆனது எதிர்பாராதது. நான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பிரணாப் முகர்ஜி வருத்தம் அடைந்ததற்கான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அவர் எனக்கு மரியாதை அளித்தார். எங்கள் இருவருக்குள்ளும் தற்போது வரை நல்ல உறவு தொடர்கிறது' என்று தெரிவித்தார். 2004-ம் ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, பிரணாப் முகர்ஜிதான் பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மன்மோகன் சிங்கை பிரதமராக சோனியா காந்தி தேர்ந்தெடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!