வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (15/10/2017)

கடைசி தொடர்பு:07:00 (15/10/2017)

''புதிய இந்தியாவை உருவாக்கவே நாங்கள் கனவு காண்கிறோம்!” - ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

“வறுமை, கல்வியறிவின்மை, சாதிவாதம், மதவாதம், தீவிரவாதம் ஆகியவை இல்லாத புதிய இந்தியாவை உருவாக்கவே நாங்கள் கனவு காண்கிறோம்” என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள்கள் பயணமாகத் தனது சொந்த நாடாளுமன்றத் தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவுக்குச் சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாளான நேற்று, அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “வறுமை, கல்வியறிவின்மை, சாதிவாதம், மதவாதம், தீவிரவாதம் ஆகியவை இல்லாத இந்தியாவை உருவாக்க நாங்கள் கனவு காண்கிறோம். பிரதமரும் அத்தகைய புதிய இந்தியாவை உருவாக்கவே கனவு கண்டார்” என்றார். அதன்பிறகு பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, ராஜ்நாத் சிங் லக்னோவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இதனையடுத்து அங்குள்ள முக்கிய பி.ஜே.பி. பிரமுகர்களைச் சந்தித்துப் பேசுகிறார். அதைத் தொடர்ந்து தனது பயணத்தை முடித்துகொண்டு டெல்லி திரும்புகிறார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க