வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (15/10/2017)

கடைசி தொடர்பு:11:07 (15/10/2017)

குடியரசுத் தலைவர்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்த அப்துல் கலாம்! #APJ

மறைந்த முன்னாள்  குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தன் பதவிக் காலத்தில் ஒரு முறை கூட  ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்து வழங்கியதில்லை. காரணம் அறிந்தால்,  வியந்து போவீர்கள்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் அப்துல்கலாம்

ஒவ்வொரு ரமலான் மாதத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் 'இப்தார்' விருந்தளிப்பது வழக்கமான பாரம்பரியமான நிகழ்வு.  கடந்த 2002-ம் ஆண்டு அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் ஆனார். அவர் குடியரசுத் தலைவராக இருந்த 5 ஆண்டுகளிலும் ஒரு முறை கூட இப்தார் விருந்து அளித்ததில்லை. மாறாக விருந்துக்கு ஆகும் செலவுத் தொகையை ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்தார் விருந்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 22 லட்ச ரூபாய் குடியரசுத் தலைவர் மாளிகையில் செலவிடப்படும். அந்தத் தொகையுடன் அப்துல் கலாம் தன் சொந்தப்பணம் ஒரு லட்ச ரூபாய் சேர்த்து, 23 லட்ச ரூபாயை ஆதரவற்றோர் இல்லத்துக்கு பிரித்து வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பொறுப்பேற்ற போது ராமேஸ்வரத்தில் இருந்து அவரது உறவினர்கள் 50 பேர் டெல்லிக்கு வந்திருந்தனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர்கள் தங்கியிருந்தனர்.  தலைநகரை சுற்றிப் பார்க்க அவர்களுக்கு ஒரு பேருந்து அமர்த்தி தரப்பட்டது. பேருந்துக்கான கட்டணத்தை அப்துல் கலாம் வழங்கி விட்டார். இவர்களில் யாருக்கும் எந்த சமயத்திலும் அரசுக்கு சொந்தமான கார் பயன்படுத்த கலாம் அனுமதிக்கவில்லை. கலாமின் உறவினர்கள் டெல்லியில் தங்கியிருந்த சமயத்தில் அவர்களுக்கு உணவுச் செலவாக 2 லட்ச ரூபாய் குடியரசுத் தலைவர் மாளிகையில் செலவிடப்பட்டது. இதைக்கூட  கலாம் தனது கையில் இருந்து செலுத்தி விட்டார். எந்த குடியரசுத் தலைவரும் இது போன்று செலுத்தியதே இல்லை. மாணவர்களுக்கு மட்டுமல்ல குடியரசுத் தலைவர்களுக்கும் அப்துல் கலாம் ஒரு முன்மாதிரி!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க