குர்தாஸ்பூர் இடைத்தேர்தல்: பா.ஜ.க தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ்! | Congress's Sunil Jakhar wins Gurdaspur Lok sabha Bypoll by 1,93,219 votes

வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (15/10/2017)

கடைசி தொடர்பு:13:26 (15/10/2017)

குர்தாஸ்பூர் இடைத்தேர்தல்: பா.ஜ.க தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ்!

பஞ்சாப் மாநில குர்தாஸ்பூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுனில் ஜாகார் 1,93,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளார்.

கொண்டாடும் காங்கிரஸ்

 

குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க எம்.பி வினோத் கண்ணா மரணமடைந்ததையடுத்து அங்கு கடந்த 11ம் தெதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, தற்போது நிறைவுப்பெற்றுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றவுடன், யார் வெற்றி பெற்றது என்பதையும் உடனடியாக அறிவித்தது தேர்தல் ஆணையம். பஞ்சாபில் ஆளும் கட்சியான காங்கிரஸின் செல்வாக்கு இந்த தொகுதியின் முடிவை வைத்து கணிக்கப்படும் என்று கூறப்பட்டது. எதிர்பார்த்தது போலவே, ஆளும் கட்சியே இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. முன்னர், இந்த தொகுதியில் பா.ஜ.க வசம் இருந்தது.  வெற்றியின் மூலம் பா.ஜ.க-வின் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸின் பஞ்சாப் மாநில தலைவர் சுனில் ஜாகார், பாரதிய ஜனதா கட்சியின் ஸ்வரன் சாலரியா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் சுரேஷ் கஜுரியா ஆகியவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவிய போதும், 1,93,219 வாக்குகள் வித்யாசத்தில் காங்கிரஸின் சுனில் ஜாகார் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.


[X] Close

[X] Close