பட்டினி நாடுகள் பட்டியல்: பாரதிய ஜனதா விளக்கம்

பட்டினிநாடுகள் பட்டியலில் இந்தியா 100 வது இடம் பிடித்துள்ளதுக்கு பாரதிய ஜனதா கட்சி விளக்கமளித்துள்ளது. 

ராகுல் காந்திக்கு ஸ்மிருதி பதிலடி

பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் கூறுகையில், ''கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச அரங்கில்  இந்தியாவின் மதிப்பைக் குறைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. 2014-ம் ஆண்டு 76 நாடுகள் கணக்கெடுப்பில் இந்தியா 55 வது இடம் பிடித்திருந்தது. தற்போது 119 நாடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. அதில், இந்தியாவுக்கு 100 வது இடம் கிடைத்துள்ளது. 44 நாடுகள் இப்போது கூடுதலாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளன'' எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த ராகுல்காந்தி, ‘பசித்தால் அமைதியாக இருங்கள், உணவு கிடைக்கவில்லை என்றால் என்ன ஆகிவிடப்போகிறது. இதுகுறித்து டெல்லியில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ எனக் கிண்டலாகக் கூறியிருந்தார்.

ராகுல்காந்திக்குத் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்தார். “அதிகாரப் பசி அவருக்கு இருக்கிறது. புள்ளிவிவரங்கள் அவ்வாறு கூறவில்லை. போதிய எண்ணிக்கையில் ஆதரவு இல்லை என்றால், சுயநலவாதிகளை உடன் சேர்த்துக் கொண்டு நாட்டை அவமதிக்க ஏதாவது கூச்சலிடலாம். பிரதமர் மோடியை ராகுல் அவமதிப்பதில் ஆச்சர்யமில்லை. ராகுல்காந்தி தொடர்ந்து நாட்டை அவமதித்து வருகிறார்'' எனக் கூறியிருந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!