வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (19/10/2017)

கடைசி தொடர்பு:15:16 (19/10/2017)

ராணுவ வீரர்களுடன் தீபாவளிக் கொண்டாடும் பிரதமர் மோடி!

இன்று, வடமாநிலங்களில் தீபாவளிக் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,காஷ்மீர் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் இருக்கும் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாட உள்ளார். 

நரேந்திர மோடி

தீபாவளிப் பண்டிகை மட்டுமன்றி முக்கிய இந்தியப் பண்டிகைகளின்போது, பிரதமர் நரேந்திர மோடி வித்தியாசமான முறையில் அதைக் கொண்டாடுவதை வழக்கமாகக்கொண்டுள்ளார். அவர், கடந்த தீபாவளியின்போது உத்தரகாண்ட் மாநில இந்தியா - சீனா எல்லையில் இருக்கும் இந்திய திபெத் படை வீரர்களுடன் பண்டிகையைக் கொண்டாடினார். இந்நிலையில், இன்று பஞ்சாப் எல்லையில் இருக்கும் பாதுகாப்புப் படையினருடன் சில மணி நேரம் செலவிட்டார். மேலும், அவர் காஷ்மீர் பகுதியில் உள்ள ராணுவத்தினருடன் தீபாவளியைக் கொண்டாட உள்ளார். முன்னர், தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'நாட்டு குடிமக்களுக்கு இந்த நல்ல நாளில் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.