மெர்சல் விவகாரத்தில் இணையத்தில் அடித்துக்கொள்ளும் காங்கிரஸ் - பா.ஜ.க  | Mersal issue clash fight between congress and BJP 

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (21/10/2017)

கடைசி தொடர்பு:17:53 (21/10/2017)

மெர்சல் விவகாரத்தில் இணையத்தில் அடித்துக்கொள்ளும் காங்கிரஸ் - பா.ஜ.க 

மெர்சல் திரைப்பட விவகாரம் தேசிய அளவில் விவாதிக்கப்பட்டுவரும் நிலையில், மெர்சல் தொடர்பாக காங்கிரஸ், பா.ஜ.க இடையே கருத்து மோதல்கள் வலுத்துவருகின்றன.

mersal
 

மெர்சல் திரைப்படத்துக்கு எதிராகவும் நடிகர் விஜய்யை விமர்சித்தும் பா.ஜ.க சார்பில் தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ’மெர்சல்’ திரைப்படத்தில், ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

பா.ஜ.க மெர்சலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதைக் கண்டித்து வைகோ, திருமாவளவன், ப.சிதம்பரம், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், கமல்ஹாசன், விஷால் உள்ளிட்ட பலர் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மெர்சல் திரைப்படம் தொடர்பாக இன்று காலை ட்வீட் செய்திருந்தார். அதில், பிரதமர் மோடியை நேரடியாகக் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். இது காங்கிரஸ் - பா.ஜ.க இணையவாசிகள் இடையேயான கருத்து மோதல்களை அதிகரித்துவிட்டது. இதையடுத்து தமிழிசை ட்விட்டரில் ராகுல் காந்திக்கு எதிர்வினையாற்றியுள்ளார்.

’உங்கள் காங்கிரஸ் ஆட்சியின் துணையோடு இலங்கையில் எம் தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டபோது எங்கே போனீர்கள் ராகுல்’ என்று தமிழிசை விமர்சித்துள்ளார். மெர்சல் திரைப்படம் காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளுக்கிடையே கருத்து யுத்தத்தை உருவாக்கிவிட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க