வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (23/10/2017)

கடைசி தொடர்பு:10:11 (23/10/2017)

’ஊழல் வழக்குகளின் தாமதத்துக்கு சி.பி.ஐ-தான் பொறுப்பு’: சுப்ரமணியன் சுவாமி

’ஊழல் வழக்குகளில் ஏற்படும் தாமதத்துக்கு சி.பி.ஐ தான் பொறுப்பு’ என சுப்ரமணியன் சுவாமி குற்றம் சுமத்தியுள்ளார்.

சுப்பிரமணியன் சாமி

ஊழல் வழக்குகளில் ஏற்படும் தாமதத்துக்கான காரணமாக சி.பி.ஐ-யை குற்றம் சுமத்தும் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “அதிகார வர்க்கத்தினரின் ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பிரதமர் மோடியின் உறுதிக்கு, இந்த நாடு நன்றிக்கடன்பட்டுள்ளது. ஆனால் இன்றைய சூழலில், நாட்டின் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளிலும் அசாதாரண தாமதம் ஏற்படுகிறது. இதற்கு முழுமுதல் பொறுப்பு சி.பி.ஐ தான். ஊழல் குற்றச்சாட்டுகளின் முகாந்திரம் தெரிந்தும்கூட சி.பி.ஐ பல வழக்குகளில் தாமதம் செய்துவருகிறது. உதாரணமாக, ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு, சாரதா சிட்ஃபண்ட்ஸ் குற்ற வழக்கு, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மற்றும் ராபர்ட் வதேராவின் நில ஊழல் தொடர்பான வழக்குகள் எனப் பல முக்கிய வழக்குகளில் விசாரணை நடத்துவதில் சி.பி.ஐ கால தாமதம் ஏற்படுத்துகிறது” என குறிப்பிட்டு எழுதியுள்ளார்.