கால் விரலால் சகோதரனுக்குப் பொட்டு வைக்கும் மாற்றுத் திறனாளி பெண்..! வைரலாகும் போட்டோ

க்ஷா பந்தன் போலவே மேற்கு வங்கத்தில் 'பாய்தோஜ்' என்கிற சகோதர- சகோதரி உறவை முன்வைத்து கொண்டாடப்படும் பண்டிகை வெகு பிரபலம். இந்தப் பண்டிகையின்போது, மூத்த சகோதரிகளிடம் இளைய சகோதரர்கள் நெற்றியில் திலகமிட்டு, ஆசி பெறுவார்கள். அக்டோபர் 21-ம் தேதி சகோதரிகளைக் கொண்டாடும் இந்தப் பண்டிகை மேற்கு வங்கத்தில் கொண்டாடப்பட்டது. கொல்கத்தா அருகே ஹூப்ளியைச் சேர்ந்த சாம்ராட் பாசுவுக்கு ஒரே ஒரு சகோதரிதான். அவர் கரங்கள் செயல் இழந்த மாற்றுத்திறனாளியும்கூட. 

மாற்றுத்திறனாளி சகோதரியின் ஆசி

எனினும், பண்டிகை தினத்தில் சகோதரியின் ஆசியைப் பெற சாம்ராட் பாசு முடிவெடுத்தார். அதனால், பாய் தோஜ் தினத்தில் குளித்து புத்தாடை அணிந்து சகோதரியிடம் ஆசி கோரினார். வீல்சேரில் அமர்ந்திருந்த அவரின் சகோதரி காலில் உள்ள குட்டை விரலால் சகோதரரின் நெற்றியில் திலகமிட்டு ஆசி வழங்கினார். சகோதரியின் ஆசியைப் பெற்ற சாம்ராட், அந்தப் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட அது வைரலாகியது. இந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. லட்சக்கணக்ககான லைக்குகளையும் அள்ளி வருகிறது. 

பலர், இந்த ஆண்டின் மிகச்சிறந்த புகைப்படம் இது என்றும் சகோதர- சகோதரின் பாசத்தை உயிர்ப்புடன் காட்டும் புகைப்படம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!