வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (25/10/2017)

கடைசி தொடர்பு:10:45 (25/10/2017)

ட்ரம்பின் War Room மோடிக்கும் உருவாக்கப்படுகிறதா?

War Room

'வார் ரூம்'(War Room) வெள்ளை மாளிகைக்குள் இருக்கும் அமெரிக்க அதிபருக்கு மிகவும் நெருக்கமான ஓர் அமைப்பு. இந்த அமைப்பின் பணி என்னவென்றால், அமெரிக்க அதிபர் குறித்து தேசியச் செய்திகளில், தொலைக்காட்சிகளில், சமூக வலைதளங்களில், டிஜிட்டல் மற்றும் பிரின்ட் மீடியாக்களில் வரும் செய்திகளைக் கண்காணித்து அறிக்கையாக அளிக்கும். இந்த அமைப்பில் 4 முதல் 10 நபர்கள் வரை இருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒரு துறையில் சிறந்து விளங்கும் நபராக இருப்பார்கள். 

தினசரி ஆறு மணிக்குத் தொடங்கும் இந்த வேலை, ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பதிவுகளை ஒருங்கிணைக்கும். இதில், வெள்ளை மாளிகை இமெயில்கள், ட்விட்கள், செய்திகள் மற்றும் இன்டர்வியூ ட்ரான்ஸ்கிரிப்டுகள் உள்ளிட்டவை அடங்கும்.

இதனைக் கொண்டு ஃபைல்களைத் தயாரித்து காலை 9:30 மணிக்கும், மாலை 4:30 மணிக்கும் ஓர் அறிக்கையை வழங்கும். இந்த இரண்டு அறிக்கைகளும் அதிபரின் பார்வைக்குச் செல்லும். அதிலிருந்து, அதிபரால் ஒருநாளின் அரசு மீதான நிறைகுறைகளைக் கண்டறிய முடியும். ஒபாமாவின் ஆட்சிக்காலம் வரை நிறைகுறைகளுடன் இருந்த இந்த அறிக்கை, தற்போது ட்ரம்ப் அதிபராக உள்ளபோது வித்தியாசமாக நடக்கிறது.

இந்த அறிக்கைகளை காலை 9:30 மணிக்கு ட்ரம்பிடம் அளிப்பார்கள். இதில், வெறும் பாசிட்டிவ் செய்திகளும், ட்ரம்பின் புகழ்பாடும் செய்திகளும் மட்டுமே இடம்பெறும். நெகட்டிவ் விஷயங்கள் தவிர்க்கப்படுமாம். ட்ரம்பைக் கெத்தாகக் காட்டும் புகைப்படங்கள், டி.வி ஷோக்கள் மட்டுமே இதில் இடம்பெறும். பாசிட்டிவ் செய்திகளை மட்டும் படித்துவிட்டுத் தன்னைப் பெருமையாக நினைத்துக்கொள்ளும் மனநிலையைத்தான் ட்ரம்ப் விரும்புகிறார். 

இதெல்லாம் வேண்டுமென்றே வெள்ளை மாளிகை அதிகாரிகளால் மறைக்கப்படவில்லை. ட்ரம்ப், வேண்டுமென்றே தன்னுடைய பாசிட்டிவ் செய்திகளை மட்டுமே விரும்பிக் கேட்கிறாராம். ட்ரம்பின் இந்தப் பாசிட்டிவ் செய்திகள் வெறும் ஹாலுசினேஷன் என்பதை, ட்ரம்ப் புரிந்துகொண்டால் மட்டுமே சர்ச்சைகளில் இருந்து வெளியே வருவார். இல்லையென்றால், நான்கு ஆண்டுகளில் அவர் செய்த தவறுகள் எல்லாம் முன்வந்து நின்று அடுத்தமுறை அதிபர் தேர்தலில் சிக்கலை ஏற்படுத்தும் என்பது அமெரிக்காவின் குரல். 

War Room

தற்போது பி.ஜே.பி தலைவர்கள், தொடர்ந்து பிரதமர் மோடியை விமர்சிப்பவர்களை அவருக்கு எதிரான மனநிலையில் இருந்து மாறுங்கள் எனக் கூறுவதையும், மோடியையும் பி.ஜே.பி அரசின் மீதான விமர்சனங்களை எதிர்ப்பதையும் தொடர்ந்துகொண்டே வருகின்றனர். அதேபோல், எல்லா மாநிலங்களில் இருந்தும் மோடியைப் பற்றிய பாசிட்டிவ் செய்திகளை மோடியிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் மாநில பி.ஜே.பி தலைவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவில் உள்ள கவனிக்க வேண்டிய விஷயங்களில் இருக்கும் எதிர்மறை கருத்துகள் மறைக்கப்பட்டால் அது இந்தியா போன்ற பெரிய நாட்ட்டுக்கு ஆபத்தாக மட்டுமே இருக்கும். 

கிட்டத்தட்ட பி.ஜே.பி கட்சி நிர்வாகிகள் பிரதமர் மோடி குறித்த நல்ல செய்திகளை மட்டுமே பிரதானப்படுத்தப்பட வேண்டும். அதனை மீறி வரும் விமர்சனங்களை முன்வைப்பவர்களை அவருக்கு எதிரான மனநிலை கொண்டவர் என்றும் இந்தியர்களுக்கு எதிரானவர் என்றும் அடையாளப்படுத்துகின்றனர். இது, அந்தக் கட்சியின் தேசியச் செயலாளர் தொடங்கி அனைவரிடத்திலும் காணப்படுகிறது. இதன்மூலம் ட்ரம்புக்கு இருப்பதைப்போன்ற வார் ரூம் அமைப்பை உருவாக்கி, மோடியை வெறும் பாசிட்டிவ் செய்திகளை மட்டுமே கவனிக்க வேண்டும் என நினைக்கிறார்களா என்ற கேள்விதான் எழுகிறது. 

தற்போதைய வார் ரூம் அமெரிக்காவின் ஆபத்து என்று அமெரிக்கர்களாலேயே கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.