வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (28/10/2017)

கடைசி தொடர்பு:19:51 (28/10/2017)

தீவிரவாத இயக்கத்தில் இணைந்த ஜம்மு காஷ்மீர் காவலர்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மாயமான காவலர் ஒருவர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தில் இணைந்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Photo Credit: Great Kashmir


ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் தலைமைக் காவலராக இருந்த இஷ்பாக் அகமது தார் என்பவர் கடந்த வாரம் மாயமானார். அவரைத் தேடும் பணியில் காவலர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், தார் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் இணைந்துவிட்டதாக சமூக வலைதளம் மூலம் அவர் அறிவித்தார். ஏகே 47 ரக துப்பாக்கி ஒன்றுடன் தார் நிற்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களுக்குக் காரணமாக லஷ்கர் இ தொய்பா இயக்கம் அறியப்படுகிறது.

தீவிரவாத இயங்கங்களில் நடப்பாண்டில் இணையும் மூன்றாவது காவலர் இவராவார். இந்த விவகாரம் குறித்து ஜம்மு காஷ்மீர் மாநிலக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அகமது தாரின் சகோதரர் உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். தீவிரவாத இயக்கங்கள் மீது ஈடுபாடு கொண்டிருந்த தார், கார்கில் பகுதியிலிருந்து கத்வா மாவட்டத்துக்குச் சமீபத்தில் மாற்றப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.