"காஷ்மீருக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும்" - ப.சிதம்பரம் கூறியிருப்பது சரியா? #VikatanSurvey | "Kashmir Should be given the autonomous status" - P.Chidambaram #VikatanSurvey

வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (30/10/2017)

கடைசி தொடர்பு:16:42 (30/10/2017)

"காஷ்மீருக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும்" - ப.சிதம்பரம் கூறியிருப்பது சரியா? #VikatanSurvey

ப சிதம்பரம்

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் மற்றும் தீவிரவாதிகள் நடத்திவரும் தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்தத் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். காஷ்மீர் மாநில அரசுக்கு எதிராக இளைஞர்கள் சிலர் அவ்வப்போது கல்வீச்சுச் சம்பவங்களில் ஈடுபடுவதுடன், மாநிலத்திற்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அம்மாநில மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், "ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும். அதேவேளையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவின்படி, காஷ்மீருக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். மேலும், இதுதொடர்பாக காஷ்மீர் மக்களுடன் கலந்துரையாடியபோது, அவர்களில் பெரும்பாலானோர் தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். என்னுடைய விருப்பமும் அதுவே" என்றார். சிதம்பரத்தின் இந்தக் கருத்துக்கு பி.ஜே.பி. தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close